தென்னங்கருப்பட்டி – Coconut Jaggery

120.00

தற்போது கருப்பட்டி பயன்பாடு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வும், வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், தேவையும் அதிகரித்துள்ளது.  Coconut Jaggery is The strained unfermented coconut sap is boiled, crystallized and transferred into suitable moulds to prepare jaggery.  (1 Unit refers 1 kg.)

Description

தற்போது கருப்பட்டி பயன்பாடு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வும், வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், தேவையும் அதிகரித்துள்ளது.

பதநீர் இறக்குதல் :தென்னை மரங்களில், வெடிக்காத பாளைகளை கயிற்றால் கட்டி, முனையை சீவிவிட்டு, அதிலிருந்து வடியும் நீரை சேமிப்பதற்காக பாளையோடு சேர்த்து பானைகள் கட்டப்படுகிறது. தொடர்ந்து, பதநீர் வடியும் வகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பாளைகள் சீவி விடப்படுகிறது. புளித்துவிடாமல் இருப்பதற்காக பானைகளில் சுண்ணாம்பு பொடி துாவப்படுகிறது. தினமும், ஒவ்வொரு மரத்திலும் பாளைகள் சீவி விடப்பட்டு பதநீர் பெறப்படுகிறது. ஒருமுறை பானைகள் கட்டும் மரத்திலிருந்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை பதநீர் இறக்கப்படுகிறது.

கருப்பட்டி உற்பத்தி:தினமும் காலை மரங்களில் கட்டப்பட்ட பானையில் வடிந்துள்ள பதநீரை சேகரித்து, வடிகட்டி கொப்பரையில் காய்ச்சப்படுகிறது. கருப்பட்டி உற்பத்தி செய்வதற்கு தேவையான பாகு பதத்திற்கு இரண்டு மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். அதன்பின், பாகினை நன்கு ஆறவைத்து, அச்சுக்குழிகளில் துணியை விரித்து, அதன்மேல் கருப்பட்டி பாகு ஊற்றப்படுகிறது. இவ்வாறு, தென்னங்கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. பாளை சீவியதில் துவங்கி தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை தடையில்லாமல் கருப்பட்டி காய்ச்ச வேண்டும். ஒருநாள் தாமதித்தாலும் பதநீர் புளித்து, பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

Coconut Jaggery is The strained unfermented coconut sap is boiled, crystallized and transferred into suitable moulds to prepare jaggery. The semisolid jaggery solidifies gradually by the cooling effect of the atmosphere into a crystallized hard substance. The recovery of jaggery from syrup is 15%. It is used as a sweetening agent for the preparation of dishes and is superior to cane jaggery.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தென்னங்கருப்பட்டி – Coconut Jaggery”

Your email address will not be published.