நாட்டுச்சர்க்கரை – Country Sugar

55.00

நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, ‘கவுந்தப்பாடி’ நாட்டுச் சர்க்கரை.  Organic Country sugar is a traditional non-centrifugal cane sugar consumed in Asia, Africa and some countries in the Americas. Other uses include jaggery toffees and jaggery cake made with pumpkin preserve, cashew nuts, peanuts and spices.  For more, see product description given below.  (1 Unit refers 1 kg.)

Browse Wishlist

Description

நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காலங்களை வென்ற ஊத்துக்குளி’ நெய், ‘சேலம்’ மாம்பழம், ‘பண்ருட்டி’ பலா, ‘மணப்பாறை’ முறுக்கு… என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, ‘கவுந்தப்பாடி’ நாட்டுச் சர்க்கரை.

மறந்து போன பழக்கம் :

  • தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாட்டுச் சர்க்கரைச் சந்தை என்றால், அது கவுந்தப்பாடிதான். முகலாயர் ஆட்சிக்கு முன்ன இருந்தே இங்க சர்க்கரைத் தயாரிப்பு நடந்திட்டிருக்கு.
  • பழனி பஞ்சாமிர்தத்தில் கலக்குற நாட்டுச் சர்க்கரை, இங்க இருந்துதான் போகுது. சீசன் காலத்துல, வாரத்துக்கு 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு வெளியூர்களுக்குப் போகும்.
  • கொஞ்ச வருடத்திற்கு முன்ன வரைக்கும் எல்லா வீட்டுலையும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தினாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்குச் சாப்பாட்டு இலையில் சர்க்கரைப், பழம் வைக்கும் வழக்கம் இருந்தது.
  • அதிரசம், லட்டு, பணியாரம்னு பலகாரங்கள்கூட இதுலதான் செய்வாங்க. கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தலில் நாட்டுச் சர்க்கரையுடன் புளிக்கரைசல் கலந்த ‘பானகம்’ கொடுப்பாங்க. இப்ப அந்தப் பழக்கமெல்லாம் மறைஞ்சுட்டு வருது.

இதுல கலப்படம் இல்லை ! :

  • “நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு ரசாயனம் கலந்த அஸ்கா சர்க்கரையை (சீனி) வாங்கி பயன்படுத்த மக்கள் பழகிட்டாங்க. இதனால் வயிறு சம்பந்தமான நோய், வயிறு எரிச்சல் ஏற்படுது.
  • சில கலப்படக்காரங்க அஸ்காவோட, அதேமாதிரி இருக்கும் செயற்கைத் துகள்களையும் கலக்கறாங்க. ஆனால், நாட்டுச் சர்க்கரையில் எந்தக் கலப்படமும் கிடையாது. மூன்று வருடம் வரைக்கும்கூட கெட்டுப் போகாது.
  • வளரும் குழந்தைகளுக்கு பாலில் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தினமும் தூங்கப் போறதுக்கு முன் ஒரு டம்ளர் கொடுத்தால்… வயிறு சம்பந்தமான எந்த நோயும் அண்டாது. உடம்பும் ஊக்கமாகும்”
மருத்துவ பயன்கள் :
  • கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
  • இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
  • நாட்டுச் சர்க்கரை வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் நாட்டுச் சர்க்கரை தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Naatu Sakkarai also known as Organic Country sugar or Organic Brown sugar, is extracted from raw sugarcane without applying any chemicals or addictives. Organic country sugar preserves all the original vitamins and minerals. Switch from refined white sugar to organic country sugar. Few benefits are it cleanses our body, acts as digestive agent, and used as a face scrub alongside wild raw honey.

Organic Country sugar is a traditional non-centrifugal cane sugar consumed in Asia, Africa and some countries in the Americas. Other uses include jaggery toffees and jaggery cake made with pumpkin preserve, cashew nuts, peanuts and spices.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாட்டுச்சர்க்கரை – Country Sugar”

Your email address will not be published. Required fields are marked *