பனங்கருப்பட்டி – Palm jaggery

170.00

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு பனங்கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.  (1 Unit refers 1 kg.)

Description

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் தெரியுமா ?

 • ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது.
 • நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது.
 • பனங்கருப்பட்டி உடம்புக்கு மிகவும் நல்லது.

பனங்கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்துவதில்லை.  இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

 • இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு பனங்கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
 • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க பனங்கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
 • ஓமத்தை பனங்கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
 • குப்பைமேனி கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
 • ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பனங்கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.
 • காபியில் சீனிக்கு பதிலாக பனங் கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
 • சர்க்கரை நோயாளிகளும் கூட பனங்கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
 • சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் பனங்கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
 • சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக பனங்கருப்பட்டி கருதப்படுகிறது.
 • பனங்கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “பனங்கருப்பட்டி – Palm jaggery”

Your email address will not be published.