Description
பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு கல்லாக்காரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் சர்க்கரை ஆகும். 100 லிட்டர் பதநீரைக் காய்ச்சி 5 கிலோ பனங்கற்கண்டு தயாரிக்கலாம். கிலோவுக்கு ரூ.300-600 வரை விலை கிடைக்கும்.
சிறப்புகள்
இதில் 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன. வி லை சற்று அதிகமென்றாலும் நீரிழிவு நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இந்த இயற்கைச் சர்க்கரையைப் பயன்படுத்துவது சிறந்தது.
நன்மைகள்
வாதம் மற்றும் பித்தத்தை நீக்கும். நுரையீரல் கோளாறுகளைக் கட்டுப்படுத்தக் கூடியது. சுக்கு, மிளகு மற்றும் திப்பிலியுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்பதால் இருமல் கட்டுப்படும்.
பனங்கற்கண்டு பால்
இது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். பசும்பாலுடன் மிளகும் பனங்கற்கண்டும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பூண்டுப் பால்
50 மில்லி பாலுடன் அதே அளவு நீரும் கையளவு உரித்த பூண்டுப் பற்களும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இறக்கும் முன் மஞ்சள்தூள், பனங்கற்கண்டு மற்றும் மிளகுத்தூள் கலந்து கடைய வேண்டும். இது இருமல் மற்றும் தலைவலியைக் கட்டுப்படுத்தக் கூடியது.
Reviews
There are no reviews yet.