Description
நாம் புளி என்று வழக்கமாக சொல்வது புளியம் பழத்தைத்தான். புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’ நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணமூட்டவும், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது.
புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. ரசம், குழம்பு, சாம்பார், புளிக்குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். ஆந்திராவில் புளியால் ஆன “பச்சிபுளுஸ” பிரசித்தம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் புளியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
தென் அமெரிக்காவில் புளியால் ஆன “Tamarindo” எனும் பானம் மிகவும் விரும்பப்படுகிறது.
மருத்துவ பயன்கள்
- புளி சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.
- புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.
- புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.
- புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.
USES
- Liver and gallbladder problems.
- Stomach disorders.
- Pregnancy-related nausea.
- Intestinal worms.
Reviews
There are no reviews yet.