வெல்லம் – Jaggery

55.00

வெல்லம் எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது.  Jaggery is a traditional non-centrifugal cane sugar consumed in Asia, Africa and some countries in the Americas. For more view product description.  (1 Unit refers 1 kg.)

Description

வெல்லம் எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது.

வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். தலைமையாக இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் ஒன்றில் வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. மேம்பட்ட மருத்துவத்தில் வெல்லத்திற்குத் தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவைத் தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வாணலியில், திறந்த வண்ணம், சுமார் 200 °C சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாற்றில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது.

சத்துக்கள்

100 கிராம் வெல்லத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
ஆற்றல் 383 கலோரிகள்
ஈரப்பதம் 3.9 கிராம்
புரதம் 0.4 கிராம்
கொழுப்பு 0.1 கிராம்
தாதுக்கள் 0.6 கிராம்
மாவுச்சத்து (carbohydrates) 95 கிராம்
சுண்ணம் (calcium) 80 மில்லி கிராம்
எரியம் (phosphorus) 40 மில்லி கிராம்
இரும்பு 2.64 மில்லி கிராம்

Jaggery is a traditional non-centrifugal cane sugar consumed in Asia, Africa and some countries in the Americas. It is a concentrated product of cane juice and often date or palm sap (see palm sugar) without separation of the molasses and crystals, and can vary from golden brown to dark brown in colour. It contains up to 50% sucrose, up to 20% invert sugars, and up to 20% moisture, with the remainder made up of other insoluble matter, such as wood ash, proteins, and bagasse fibres. Jaggery is mixed with other ingredients, widely used as a tree pulp additive for pain. Ancient scriptures on Ayurveda mention various medicinal uses based on method of preparation and age.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெல்லம் – Jaggery”

Your email address will not be published.